மொத்த வியாபாரிகளுக்கு கட்டுப்பாடு... மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் அறிவிப்பு...

பருப்பு வகைகளை இருப்பு வைப்பதில் மொத்த வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல்

மொத்த வியாபாரிகளுக்கு கட்டுப்பாடு... மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் அறிவிப்பு...

அக்டோபர் 31ஆம் தேதி வரை பருப்பு வகைகளை இருப்பு வைப்பதில் மொத்த வியாபாரிகள் 200 மெட்ரிக் டன் அளவிற்கு மேல் வைத்திருக்கக் கூடாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அக்டோபர் 31ஆம் தேதி வரை பருப்பு வகைகளை இருப்பு வைப்பதில் மொத்த வியாபாரிகள் 200 மெட்ரிக் டன் அளவிற்கு மேல் வைத்திருக்கக் கூடாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.            

இதுதொடர்பாக மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் எழுப்பிய கேள்விக்கு மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் இரண்டாம் தேதி மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி பாசிப் பருப்பு வகையை தவிர மற்ற வகை பருப்புகளை சேமித்து வைப்பதில் வியாபாரிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த கட்டுப்பாடுகள் வரும் அக்டோபர் மாதம் இறுதிவரை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மொத்த வியாபாரிகள் 200 மெட்ரிக் டன் அளவிற்கு மேல் பருப்பு வகைகளை சேகரித்து வைக்க கூடாது என்றும், ஏதாவது ஒரு குறிப்பிட்ட வகை பருப்பு என்றால் அது 100 மெட்ரிக் டன்னுக்கு மேல் இருக்கக்கூடாது எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

சில்லரை வியாபாரிகள் பொருத்தவரை 55 மெட்ரிக் டன் அளவிற்கு மட்டுமே பருப்பு வகைகளை சேமித்து வைக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறக்குமதியாளர்களை பொறுத்தவரை மொத்த வியாபாரிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தான் விதிக்கப்பட்டதாகவும், இறக்குமதியாளர்கள் மே 15ஆம் தேதிக்கு பிறகு பருப்பு பொருட்களை இறக்குமதி செய்தார்கள் என்றால் அவர்களுடைய இறக்குமதிக்கு அனுமதி கிடைத்தது.