போர் நிறுத்தத்தால் பலனடைந்த இந்திய மாணவர்கள்... சுமி-யில் இருந்து பத்திரமாக மீட்பு!!

உக்ரைனின் சுமி பகுதியில் சிக்கியிருந்த இந்திய மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுவிட்டதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

போர் நிறுத்தத்தால் பலனடைந்த இந்திய மாணவர்கள்... சுமி-யில் இருந்து பத்திரமாக மீட்பு!!

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் அங்கு சிக்கியுள்ள மாணர்கள் உள்பட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் இந்திய போர் விமானங்கள் மூலம் இந்தியர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உக்ரைனின் சுமி நகரத்தில் சிக்கியிருந்த அனைத்து இந்திய மாணவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுவிட்டதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.  

இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சுமியிலிருந்து வெளியேற்றப்பட்ட இந்திய மாணவர்கள் அனைவரும் கிட்டதட்ட 175 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பொல்டாவா என்னும் பகுதிக்கு அழைத்து வரப்பட்டு, அங்கிருந்து ரயில் மூலம் மேற்கு உக்ரைனுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளதாகவும்,அங்கிருந்து அவர்கள் இந்திய போர் விமானங்கள் மூலம் நாடு திரும்ப உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்று நாள் முழுக்க உக்ரைனின் சுமி உள்பட 5 பெரு நகரங்கள் மீதான தாக்குதலை ரஷ்ய நிறுத்திய நிலையில் சுமியில் இருந்து 2 கான்வாய்களில் மக்கள் நேற்று வெளியேறியுள்ளது குறிப்பிடதக்கது.