வெண்மையான மலைக்குன்றுகளாக காட்சி அளிக்கும் பனிக்கட்டிகள்..!

வெண்மையான மலைக்குன்றுகளாக காட்சி அளிக்கும் பனிக்கட்டிகள்..!

ஜம்மு – காஷ்மீரின் குல்மார்க் உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காரணமாக வெண்மையான மலைக்குன்றுகள் போன்று பனிக்கட்டிகள் காட்சி அளிக்கின்றன.

கடந்த சில நாட்களாவே அதிகப்படியான பனிப்பொழிவு காரணமாக ஜம்முவில் சாலை மற்றும் விமான போக்குவரத்து கடும் பாதிப்பை சந்தித்தன. உறைய வைக்கும் பனிப்பொழிவு காரணமாக ஒருபுறம் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மறுபுறம் ஸ்ரீநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான குல்மார்க் உள்ளிட்ட இடங்களில் பனிக்கட்டிகள் குன்றுகள் போன்று காட்சி அளிக்கின்றன. இங்கு உள்ள உணவு விடுதிகளை பனிக்கட்டிகள் சூழ்ந்துள்ளதால், பொதுமக்கள் அங்கு செல்ல ரோப் கார் சேவை தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.