டெல்லியில் சூறாவளி காற்றுடன் கனமழை.. மரங்கள் வேரோடு சாய்ந்ததில் 2 பேர் பலி!!

டெல்லியில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால், மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

டெல்லியில் சூறாவளி காற்றுடன் கனமழை.. மரங்கள் வேரோடு சாய்ந்ததில் 2 பேர் பலி!!

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார புறநகர்களான என் சி ஆர், நொய்டா மற்றும் குருகிராம் ஆகிய இடங்களில் நேற்று மாலை பலத்த சூறாவளி காற்றுடன்  கனமழை பெய்தது.

இதனால் நகரின் ஒரு சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. முக்கிய சாலைகளில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். கனமழையால் டெல்லி ஜமா மஸ்ஜித் பகுதியைச் சேர்ந்த 50 வயது முதியவர் மீது பால்கனி இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், வடக்கு டெல்லி பகுதியிலும் ஒருவர் உயிரிழந்தார். நேற்று மட்டும் 300 இடங்களில் மரம் விழுந்ததாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.  சூறவாளிக் காற்றில் சாய்ந்து விழுந்த மரங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில் இன்றும் மழை பெய்து வருகிறது. போக்குவரத்து வழிதடங்கள் மாற்றப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். ஒரு சில இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.