சீன எல்லையில் உள்ள சர்ச்சைக்குரிய குடியிருப்புகள் குறித்து இந்தியா விளக்கம்...

சீன எல்லையில் தான், சர்ச்சைக்குரிய குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது என பென்டகனின் அறிக்கை குறித்து இந்தியா விளக்கமளித்துள்ளது.

சீன எல்லையில் உள்ள சர்ச்சைக்குரிய குடியிருப்புகள் குறித்து இந்தியா விளக்கம்...

அருணாச்சல பிரதேசம் எல்லை அருகே, சீனா நூறு வீடுகள் கொண்ட கிராமத்தை அமைத்துள்ளதாக, அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பான பென்டகன் அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தது. மேலும் இந்த குடியிருப்புகள் குறுகிய காலத்தில் கட்டப்பட்டவை என்றும், இதனால் இரு நாடுகளுக்கு இடையிலும் பதற்றம் நீடிப்பதாகவும் கூறியிருந்தது.

இதற்கு விளக்கம் கொடுத்த சீனா, இந்தியாவின் அச்சுறுத்தல் காரணமாகவே, தங்களது எல்லையில் ராணுவ குடியிருப்புகளை அமைத்துள்ளதாக கூறியது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அரசு, இந்த ராணுவ குடியிருப்புகள் சீன எல்லைகளில்தான் அமைந்துள்ளது எனவும், ஆண்டாண்டு காலமாக இவை கட்டப்பட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளது.