இடைத்தேர்தல் நடத்த தாமதிப்பதில் உள்நோக்கம்...  மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு...

மேற்குவங்கத்தில் இடைத்தேர்தல் நடுத்த தாமதப்படுத்துவதில் உள்ளேநாக்கம் இருப்பதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

இடைத்தேர்தல் நடத்த தாமதிப்பதில் உள்நோக்கம்...  மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு...
மேற்குவங்கத்தில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை விரைந்து நடந்த வேண்டுமென அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளார்.
 
தற்போது கொரோனா கட்டுப்பாட்டுக்குள் உள்ளதால் ஏழு நாட்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேற்குவங்கத்தில் கொரோனா பரவல் 33 சதவீத இருந்த போது சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றதை சுட்டிக்காட்டிய அவர், தற்போது 3 சதவீதம் மட்டுமே உள்ள நிலையில் தேர்தல் நடத்த தாமதிப்பதில் உள்நோக்கம் உள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
 
மேற்குவங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், நந்திகிராம் தொகுதியில் மம்தா தோல்வியைத் தழுவினார். எனினும் முதலமைச்சராக பதவியேற்றுள்ள அவர், நவம்பர் 5ம் தேதிக்குள் சட்டமன்ற உறுப்பினராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.