பஞ்சாப் சட்டபேரவையின் ஒரு நாள் சிறப்பு கூட்டத்தொடர்.. பதவியேற்றுக் கொண்ட எம்.எல்.ஏ-கள்!!

பஞ்சாப் சட்டபேரவையின் ஒரு நாள் சிறப்பு கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வரும் நிலையில் எம்.எல்.ஏ-கள் அனைவரும் பதவியேற்றுக் கொண்டனர்.

பஞ்சாப் சட்டபேரவையின் ஒரு நாள் சிறப்பு கூட்டத்தொடர்.. பதவியேற்றுக் கொண்ட எம்.எல்.ஏ-கள்!!

நடந்து முடிந்த பஞ்சாப் சட்டபேரவை தேர்தலில் ஆம் ஆத்மி 92 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது.

இதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்த பஞ்சாபை ஆம் ஆத்மியின் தன்வசப்படுத்தியது. இதையடுத்து அக்கட்சி முன்பே அறிவித்திருந்தபடி பாஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக பகவந்த் சிங் மான் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

பதவியேற்பு விழாவில் டெல்லி முதல்வரும் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், துணை தலைவர் மணீஷ் சிசோடியா மற்றும் ஏராளமானோர் மஞ்சள் நிற தலைப்பாகை அணிந்து கலந்துக் கொண்டனர். முதல்வர் பகவந்த் சிங் மானுடன் சேர்ந்து 16 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.  

இந்நிலையில் பஞ்சாப் சட்டசபையின் ஒருநாள் சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சட்டபேரவை உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றன் பின் ஒன்றாக பதவியேற்றுக் கொண்டனர். முதலாவதாக பகவந்த் சிங் மான் சட்டபேரவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். இந்த நிலையில் இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை பகவந்த் சிங் மான் வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.