தொழிலாளர் துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன - பிரதமர் உரை!

தொழிலாளர் துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன - பிரதமர் உரை!

கடந்த 8 ஆண்டுகளில் தொழிலாளர் துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தேசிய தொழிலாளர் நல மாநாடு:

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் இடையேயான தேசிய தொழிலாளர் நல மாநாடு திருப்பதியில் தொடங்கியது. நாடு முழுவதும் தொழிலாளர்கள் நாள்தோறும் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் தொழிலாளர் நலன் குறித்த திட்டங்களில் மத்திய - மாநில அரசுகளிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் வகையில், 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்று உரையாற்றினார்.

மேலும் படிக்க: https://www. malaimurasu.com/posts/cover-story/ADMK-office-violence-Case-registered-against-OPS

இந்தியாவில் தொழிலாளர் சக்தி பலம் பெறும்:

அப்போது பேசிய பிரதமர், கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் தொழிலாளர் துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக தெரிவித்தார். தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் கூறினார். தொழிலாளர்களுக்கான அடிப்படை ஊதியம், காப்பீடு மற்றும் இதர பலன்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், அமைப்பு சாரா துறைகளில் பணியாற்றுவோரின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார். இதன் மூலம் இந்தியாவில் தொழிலாளர் சக்தி பலம் பெறும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.