விறுவிறுப்படைந்த காங்கிரஸ் தலைவர் தேர்தல்...மூத்த தலைவர்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு!

விறுவிறுப்படைந்த காங்கிரஸ் தலைவர் தேர்தல்...மூத்த தலைவர்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு!

டெல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் தேர்தல் தொடங்கியதை அடுத்து, மூத்த தலைவர்கள் பலரும் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். 

காங்கிரஸ் தலைவர் தேர்தல்:

காங்கிரஸ் கட்சிக்கு காந்தி குடும்பத்தை சேராத ஒருவரை தலைவராக தேர்ந்தெடுக்கும் தேர்தல் நாடு முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திலும் காலை 10 மணிக்கு தேர்தல் தொடங்கியது. காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, தனது மகளும், கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தியுடன் சென்று வாக்களித்துள்ளார்.  இதேபோல் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட தலைவர்களும் வாக்களித்த நிலையில், மேலும் பலர் வாக்களித்து வருகின்றனர். 

இதையும் படிக்க: தமிழ் உணர்வை அழிக்க பயன்படுத்தும் சொல் தான் திராவிடம்...ஹெச்.ராஜா பேட்டி!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் மல்லிகார்ஜூன கார்கே வாக்களித்துள்ளார். இதேபோல் பெல்லாரியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காநிதியும் வாக்களித்தார்.

கேரளாவில் வாக்களித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சசிதரூர், காங்கிரஸின் மறுமலர்ச்சி உதயமாகி விட்டதாகவும், தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும், தானும் கார்கேவும் நண்பர்களாக இருக்க வேண்டும் என முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.