புடவை கட்டி வந்தா உள்ளே விட முடியாது.. நட்சத்திர ஹோட்டலின் அட்ராசிட்டி..வைரல் வீடியோ

தலைநகர் டெல்லியில் புடவை அணிந்து நட்சத்திர விடுதிக்கு சென்ற பெண்ணிற்கு, விடுதி நிர்வாகம் அனுமதி மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் பத்திரிகையாளரான அனிதா சவுத்ரி, தமது மகளின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு, அழகான புடவை அணிந்து நட்சத்திர விடுதிக்கு சென்றுள்ளார்.

அவரை வாசலிலேயே வழிமறித்த விடுதி பணியாளர்கள், மேற்கத்திய ஆடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும், புடவைகளுக்கு அனுமதி அளிக்க முடியாது எனவும் கூறியுள்ளனர்.

இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, புடவை அணிந்து சென்ற பெண்ணை விடுதிக்குள் அனுமதிக்க மறுக்கும் காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி தற்போது பேசு பொருளாகியுள்ளது.