பெகாசஸ் விவகாரத்தை ஆராய நிபுணர்கள் கொண்ட தொழில்நுட்ப குழு - உச்சநீதிமன்றம்

பெகாசஸ் விவகாரத்தை ஆராய நிபுணர்கள் கொண்ட தொழில்நுட்ப குழுவை ஏற்படுத்தவுள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பெகாசஸ் விவகாரத்தை ஆராய  நிபுணர்கள் கொண்ட தொழில்நுட்ப குழு - உச்சநீதிமன்றம்

பெகாசஸ் விவகாரத்தை ஆராய நிபுணர்கள் கொண்ட தொழில்நுட்ப குழுவை ஏற்படுத்தவுள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் உளவு மென்பொருளான பெகாசஸை கொண்டு, பிரபல பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கபட்டதாக உச்சநீதிமன்றத்தில் புகார் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக கடந்த முறை நடந்த  விசாரணையின் போது, ஒட்டுக்கேட்பு நடவடிக்கை சட்டரீதியாக நடைபெற்றதா, பெகாசஸ் மென்பொருள் பயன்படுத்தப்பட்டதா என்ற கேள்விக்கு மத்திய அரசு முறையான விளக்கம் அளிக்கவில்லை. மேலும்  அதுதொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவும் மத்திய அரசு மறுத்துவிட்டது.

இந்தநிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பெகாசஸ் தொடர்பாக நிபுணர்கள் குழுவை ஏற்படுத்த உள்ளதாகவும், உறுப்பினர்கள் விவரங்களுடன் விரிவான உத்தரவு அடுத்த வாரம் பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவித்து, விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.