நொய்டாவில் இரட்டை குடியிருப்புகள் தகர்த்தப்பட்டது....!

நொய்டாவின் சூப்பர் டெக் இரட்டை கோபுரங்கள் இன்று மதியம் 2:30 மணிக்கு இடிக்கப்பட்டது.

நொய்டாவில் இரட்டை குடியிருப்புகள் தகர்த்தப்பட்டது....!

இந்தியாவின் மிக உயரமான கட்டிடமாக நோய்டாவின் இரட்டை கோபுரங்கள், உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று மதியம் 2.30 மணிக்கு தரைமட்டமாக்கப்பட்டது. இந்த இரட்டை கோபுரம், சூப்பர்டெக்கின் எமரால்டு கோர்ட் திட்டத்தின் பகுதியாக, நொய்டா-கிரேட்டர் நொய்டா எக்ஸ்பிரஸ்வேயில் அமைந்துள்ளது. ஒவ்வொரு கோபுரமும் 40 அடுக்குகள் கொண்டது. சுமார் 7.5 லட்சம் சதுர அடி பரப்பளவில் 900க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளையும் கொண்டுள்ளன. விதிகளை மீறி கட்டப்பட்ட இந்த இரட்டை கோபுர கட்டிடத்தை இடிக்க 3700 கிலோ வெடிமருந்து பயன்படுத்தபட்டதாக தகவல்.