மின் ஊழியர்கள் போராட்டத்துக்கு தீர்வு காணவில்லையென்றால்...காங்கிரஸ் எச்சரிக்கை!

மின் ஊழியர்கள் போராட்டத்துக்கு தீர்வு காணவில்லையென்றால்...காங்கிரஸ் எச்சரிக்கை!

புதுச்சேரியில் மின்துறையை தனியார்மயமாக்கம்  நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

தொடர் மின்வெட்டு

இதனால் மாநிலம் முழுவதும் சில பகுதிகளில் மின்தடை ஏற்ப்படுவதால் அதனை சரிசெய்ய மின்துறை ஊழியர்கள் வராததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். எதையும் கண்டுகொள்ளாமலும். பொதுமக்கள் மற்றும் மின்துறை ஊழியர்களிடம் கருத்து கேட்காமல் திடீர் என மின்துறை தனியாருக்கு தாரைவார்க்க தற்போதைய பாஜக-என். ஆர் காங்கிரஸ் கூட்டணிஅரசு. எடுத்துள்ள இந்த முடிவை காங்கிரஸ் அரசு வன்மையாக கண்டிப்பதாக கூறினார். 

பொது மக்கள் - ஊழியர்களுடன் இணைந்து போராட்டம்

மேலும்  முந்தைய நாராயணசாமி தலைமையிலான அரசு ஒப்புதல் தெரிவிக்காமல், மத்திய அரசின் முடிவை எதிர்த்து வந்தது. ஆனால், பாஜக - என். ஆர். காங்கிரஸ் கூட்டணி அரசு  ஒப்புதல் தெரிவித்துவிட்டது. இதனால் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை மின் ஊழியர்கள் நடத்திவருகிறார்கள். மின்துறை தனியார் மாமானால் மாநிலத்தில் 3 ஆயிரம் மின் ஊழியர்கள், மின் நுகர்வோர் பாதிக்கப்படுவார்கள் என கூறினார் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சந்திரமோகன். மின்துறை ஊழியர்களை அழைத்துப் பேசியும் பொதுமக்களிடம் கருத்து கேட்டு இந்த பிரச்சனைக்கு சுமூக தீர்வுகான வேண்டும் என கூறினார். தொடர்ந்து அலட்சிய போக்கை அரசு கடைபிடித்தால் மின்துறை ஊழியர்களுக்கு ஆதரவாக பொது மக்களுடன் பல்வேறு கட்ட போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட உள்ளதாக அவர் தெரிவித்தார்.