மகாராஷ்டிரா விபத்து-13 பேர் பலி

மகாராஷ்டிரா சாலை வழி பேருந்து நர்மதா ஆற்றில் விழுந்து விபத்து: 13 பேர் பலி, காணாமல் போனவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மகாராஷ்டிரா விபத்து-13 பேர் பலி

மத்திய பிரதேசத்தின் போபாலில் இருந்து மகாராஷ்டிராவின் புனேவை நோக்கி சென்ற பேருந்து தார் மாவட்டத்தின் உள்ள பாலத்தில் சென்ற போது ஓட்டுநரின் தடுமாற்றத்தால் நர்மதா ஆற்றின் உள்ளே விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  பேருந்தில் 50 பேர் பயணித்ததாக தெரிகிறது.  தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்து செய்தி அதிர்ச்சி அளிப்பதாகவும் தற்போது வரை 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.  மேலும் மகாராஷ்டிராவின் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருடனும் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்குவதாக மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா பேருந்து தார் மாவட்டத்தில் பாலத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதை அறிந்து மிகவும் வேதனை அடந்ததாக மகாராஷ்டிர 
முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  மேலும் அவர் , தார் மாவட்ட கலெக்டருடன் தொடர்பில் இருப்பதாகவும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.  விபத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

இத்துயர சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.  மேலும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துள்ளார்.  மேலும் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் 2 லட்சமும், காயமுற்றவர்களின் சிகிச்சைக்காக ரூபாய் ஐம்பதாயிரமும் அறிவித்துள்ளார்.