இங்கிலாந்து நாட்டின் போர்படை குழுவுடன் பிரமாண்டமான கூட்டு ராணுவ ஒத்திகையில் இந்தியா உள்ளிட்ட 40 நாடுகள் பங்கேற்பு...

இங்கிலாந்து நாட்டின் போர்படை குழுவுடன் பிரமாண்டமான கூட்டு ராணுவ ஒத்திகையில் இந்தியா உள்ளிட்ட 40 நாடுகள் பங்கேற்பு...

இங்கிலாந்து நாட்டின் போர்படை குழுவுடன் 28 வாரங்களுக்கு நடக்கும் பிரமாண்டமான கூட்டு ராணுவ ஒத்திகையில் இந்தியா, அமீரகம் உள்ளிட்ட 40 நாடுகள் பங்கேற்கிறது.

இங்கிலாந்து நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில்  ‘இந்தோ-பசுபிக்’ பகுதிகளான மத்திய தரைக்கடல், செங்கடல், ஏடன் வளைகுடா, அரேபிய கடல், இந்திய பெருங்கடல் மற்றும் பசுபிக் பெருங்கடல் ஆகிய பகுதிகளில் கூட்டு ராணுவ பாதுகாப்பு ஒத்திகையை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மாதம் முதல் வரும் டிசம்பர் மாதம் வரை 40 ஆயிரத்து 100 கி.மீ தொலைவு கடல் பரப்பில் இந்த ஒத்திகையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ராணுவ ஒத்திகை பயிற்சிகளில் இந்தியா, ஜப்பான், சிங்கப்பூர், கொரியா உள்ளிட்ட 40 நாடுகள் பங்கேற்கிறது. இதில் அமீரகத்தின் ராணுவத்தினரும் இந்த ஒத்திகையில் பங்கேற்க உள்ளனர். இந்த பிரமாண்ட போர் பயிற்சி குழுவானது இங்கிலாந்து நாட்டின் ஹெச்.எம். எஸ்.குயின் எலிசபெத் என்ற கடற்படையின் சக்தி வாய்ந்த போர் கப்பல் தலைமையில் புறப்படுகிறது.

அந்த போர் கப்பலுடன் 9 துணை போர் கப்பல்கள், 276 ராணுவ ஹெலிகாப்டர்கள், 3 ஆயிரத்து 700 ராணுவ வீரர்கள் வருகை புரிய உள்ளனர். மேலும் சக்தி வாய்ந்த ஏவுகணைகள், ஜெட் விமானங்கள், நீர்மூழ்கி கப்பல்கள் ஆகியவைகளும் பங்கேற்கின்றன.

இந்தோ-பசுபிக் பகுதியின் பாதுகாப்பு உறவுகளை நீட்டிப்பதற்கும், பிரதேச அளவில் நிலைத்தன்மை மற்றும் வெளியுறவு கொள்கைகளை வலுப்படுத்தவும் இந்த முயற்சியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் வர்த்தக உறவுகளை இந்தோ பசுபிக் பிரதேச நாடுகளில் மேம்படுத்துவதற்கும் இது உதவிகரமாக இருக்கும் என இங்கிலாந்து நாட்டின் பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் கூறியுள்ளார்.