கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 5 பேர் கைது

ஐதராபாத் அருகே கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட எல்லை பாதுகாப்பு படை ஊழியர்  உட்பட 5 பேரை சித்தி பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 5 பேர் கைது

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சித்தி பேட்டையை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். புகைப்பட களைஞரான இவர் போட்டோ லேப் அமைப்பதற்காக முடிவெடுத்துள்ளார். அதற்கு தேவையான பணம் இல்லாத காரணத்தால் தன்னுடைய நண்பர்களான சாய்குமார், நீரஜ்குமார், ஜலகம் ராஜ் ஆகியோருடன் சேர்ந்து குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி இவர்கள் அனைவரும் சேர்ந்து கள்ளநோட்டு புழக்கத்தில் விடுவது என்று முடிவு செய்தனர்.

அதற்காக  லேப்டாப்,பிரிண்டர் மற்றும் கள்ளநோட்டு அச்சிடுவதற்கு  தேவையான பொருட்களை வாங்கி 500 ரூபாய் முதல் 2000 ரூபாய் முக மதிப்புள்ள கள்ளநோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட்டனர். அவர்களுடன் சேர்ந்து எல்லை பாதுகாப்பு படை ஊழியரான சீனிவாசஸ் என்பவரும், கமிசன் அடிப்படையில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு வந்துள்ளார்.

இது பற்றிய தகவல் அறிந்த சித்தி பேட்டை போலீசார் ஐந்து பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 16 லட்ச ரூபாய் முக மதிப்புள்ள 500 ரூபாய் 2000 ரூபாய் கள்ள நோட்டுகளை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் லேப்டாப்,பிரிண்டர் மற்றும் கள்ள நோட்டுகளை அச்சிட பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் போலீசார் கைப்பற்றினர்.