ஆப்கானிஸ்தான் சுதந்திரமான இறையாண்மை கொண்ட நாடு

ஆப்கானிஸ்தான் சுதந்திரமான இறையாண்மை கொண்ட நாடு என தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் சுதந்திரமான இறையாண்மை கொண்ட நாடு

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் மீண்டும் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து, 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கப்படைகள் இன்று முழுமையாக வெளியேறின. அமெரிக்க படைகள் வெளியேறியதை தாலிபான்கள் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டும், பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடினர்.

மேலும், அமெரிக்க படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த காபூல் விமானநிலையத்தையும் தாலிபான்கள் கைப்பற்றினர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான விமானங்களை தாலிபான்கள் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் சுதந்திரமான இறையாண்மை கொண்ட நாடு என தாலிபான்கள் இன்று அறிவித்தனர். அமெரிக்க படைகள் வெளியேறியதை வரலாற்று சிறப்பு மிக்க தருணம் என தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்தியாளர்களிடம் பேசிய தாலிபான்களின் செய்தித்தொடர்பாளர் சபிஹூல்லா முஜாகித், ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம் சுதந்திரமான இறையாண்மை கொண்ட நாடு என்பதில் தங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை’ என தெரிவித்துள்ளார்.