கொந்தளிப்புடன் காணப்படும் கடற்கரை... ஆபத்தை உணராமல் விளையாடி மகிழும் சுற்றுலா பயணிகள்

காரைக்கால் கடற்கரையில் கொந்தளிப்புடன் அலைகள் எழும்பி வரும் நிலையில், ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகளும், சிறுவர்களும் விளையாடி மகிழ்வது அச்சத்தை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

கொந்தளிப்புடன் காணப்படும் கடற்கரை... ஆபத்தை உணராமல் விளையாடி மகிழும் சுற்றுலா பயணிகள்

தென்கிழக்கு வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது.  தொடர் கனமழை காரணமாக காரைக்கால் கடற்கரை மிகுந்த சீற்றத்துடன் கொந்தளித்து காணப்படுகிறது.

கடல் சீற்றம் காரணமாக மீனவர்களும், உள்ளூர்வாசிகள் கடற்கரைக்கு செல்லாத நிலையில் வெளியூரில் இருந்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் கடல்நீரில் விளையாடி வருகின்றனர்.

கடல் சீற்றத்துடன் காணப்படும் வேளையில் ஆபத்தை உணராமல் கடற்கரையில்  விளையாடி மகிழும் சுற்றுலா பயணிகளை அங்கிருந்து அப்புறப்படுத்த கடலேர காவலர்களும்  கடற்கரை பகுதியில் இல்லாத நிலை மிகவும் வருத்தமளிப்பதாக சமூக ஆர்வர்கள் கூறுகின்றனர்.

மேலும் இது போன்று கடல் சீற்றமாக இருக்கும் நேரத்தில் கடற்கரை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளை அனுமதி அளிக்காமல் திருப்பி அனுப்பதற்காக, அங்கு கடரோர காவல்படையினர் கட்டாயம் இருக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.