ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பதுங்கு குழி மீது நடத்திய தாக்குதலில் 51 பயங்கரவாதிகள் உயிரிழப்பு...

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகே, தலிபான்களின் பதுங்கு  குழி மீது பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் 51 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.  

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பதுங்கு குழி மீது நடத்திய தாக்குதலில் 51 பயங்கரவாதிகள் உயிரிழப்பு...

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க துருப்புகள் விலகி வருவதை அடுத்து, அங்கு தலிபான்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளனர். நாட்டின் 85 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகள் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில், அங்கு வசிக்கும் அப்பாவி மக்கள் பயங்கரவாதிகளின் சித்ரவதைக்கு ஆளாகி வருகின்றனர். இதனிடையே தலிபான்களை ஒடுக்கும் முயற்சியில் ஆப்கான் ராணுவ படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் இன்று அதிகாலை கந்தகாரில் உள்ள விமான நிலையம் நோக்கி அடுத்தடுத்து 3 ஏவுகணைகள் வீசப்பட்டது. இந்த பயங்கரவாத தாக்குதலில் விமான ஓடுதளத்தில் பள்ளம் ஏற்படவே, விமான போக்குவரத்து சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக  இன்று காபூல் அருகே உள்ள பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தை  அடையாளம் கண்டு ஆப்கான் படையினர் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் குண்டு வெடித்து பதுங்கு மறைவிடத்தில் இருந்த 51 தலிபான்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 40 பேர் இந்த தாக்குதலில் படுகாயமடைந்தனர். அங்கு தொடர்ந்து தலிபான் மற்றும் ராணுவத்திடையே சண்டை நடைபெற்று வருகிறது.......