பெட்சீட் துவைக்கலைன்னா பிறப்புறுப்பில் நோய்கள் ஏற்படுமாம்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்

படுக்கையில் பயன்படுத்தும் போர்வைகளை வாரத்திற்கு 2 முறை மாற்றவில்லையென்றால் பல்வேறு நோய் ஏற்படலாம் என ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.

பெட்சீட் துவைக்கலைன்னா பிறப்புறுப்பில் நோய்கள் ஏற்படுமாம்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை தூய்மையாக வைத்துக் கொள்வது அனைவரின் கடமை. சிலர் அந்த பெட் சீட்டை மாற்றாமல் ஒரே பெட்சீட்டை பயன்படுத்தி உறங்குவார்கள். 

இவ்வாறு செய்வதால் பல்வேறு நோய்கள் தாக்கப்படும் அபாயம் உள்ளதாக ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். பல மாதங்களாக ஒரே பெட்சீட்டை பயன்படுத்துவது மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பருவகால நோய்கள், சுவாச நோய்கள், sexually transmitted diseases என்று சொல்லப்படும் பாலியல் ரீதியான நோய்கள் எளிதில் பரவக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதுமட்டுமில்லாமல்  முகப்பரு, அலர்ஜி , தோல் அலர்ஜி, ஆஸ்துமா, சளி போன்ற பாதிப்புகள் ஏற்படுமாம். மேலும், தூக்கமின்மைக்கு பெட்சீட்டுகளும் முக்கிய காரணமாக அமையலாம் என்பதை மக்கள் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை என்றும் 

நம் கண்ணுக்கு புலப்படாத இறந்த செல்கள், தூசி, எண்ணெய் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உங்களை நோய்வாய்ப்படுத்தக்கூடிய பிற விஷயங்களை பெட்சீட்டுகளில் குவிந்திருக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பிரபல மருத்துவ ஆராய்ச்சியாளர் டிம் கிரே தனது இன்ஸ்டாகிராம் பதிவில் நிமோனியா மற்றும் கோனோரியா ((gonorrhoea ))என்ற பிறப்புறுப்பு நோயை ஏற்படுத்தும் கூடிய பாக்டீரியாக்கள் 7 நாட்களுக்குள் பெட்சீட்டுகளில் வளரத் தொடங்கும் என்றும் எனவே மக்கள் தங்கள் பெட்ஷீட்களை அடிக்கடி மாற்ற வேண்டும். சுத்தமாக துவைத்து பயன்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.