எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு...

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு...
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபொற்று வருகிறது. இதில் முதல் நாள் முதலே பெகாசஸ் உள்ளிய்ய முக்கிய பிரச்சனைகளை எழுப்பி எதிர்கட்சிகளின் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அவையில் எந்த வித ஆக்கபூர்வ நடவடிக்கைகளும் இன்று முடக்கப்படுகிறது.
 
எதிர்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியிலும் மத்திய பாஜக அரசு 6 மசோதாக்களை அவையில் தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் 8 ஆம் நாள் அமர்வு இன்று கூடியது. அப்போது மீண்டும் பெகாசஸ், விவசாயிகள் பிரச்சனை, பணவீக்கம் போன்ற அதி முக்கிய மக்கள் பிரச்சனைகளில் உடனடி விவாதம் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. அவையை சுமூகமாக நடத்த எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்கும் படி மத்திய அமைச்சர்கள் கேட்டுக் கொண்ட போது எதிர்கட்சிகளின் கூச்சல் குறைந்தபாடில்லை. 
 
இதனிடையே இதே நிலை தொடர்ந்தால் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் அவை உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரிக்கை விடுத்த போதும் எந்த பயணும் இல்லை. இதையடுத்து அவையை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.