மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு...

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் குறித்து விவாதிப்பதற்காக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். 

மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு...

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இம்மாதம் 19 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்டு 13 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடர்பான விஷயங்கள் குறித்து விவாதிப்பதற்காக ஜுலை 18 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். 

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரானது காலை 11 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 40 மசோதாக்கள், 5 அவசர சட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அதே தினம் நாடாளுமன்ற அனைத்துக் கட்சிகளின் அவைத் தலைவர்கள் கூட்டத்திற்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ரஃபேல் விவகாரம், தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ள நிலையில், கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.