காவிரி மேலாண்மை ஆணைய ஒப்புதல் இல்லாமல் மேகதாதுவில் அணை கட்டும் திட்டம் வராது: மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உறுதி

காவிரி மேலாண்மை ஆணைய ஒப்புதல் இல்லாமல் மேகதாதுவில் அணை கட்டும் திட்டம் வராது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் உறுதியளித்துள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணைய ஒப்புதல் இல்லாமல் மேகதாதுவில் அணை கட்டும் திட்டம் வராது: மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உறுதி

கர்நாடகாவின் மேகதாதுவில் அணை கட்ட அம்மாநில அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கர்நாடகா அரசின் இந்த முடிவிற்கு, தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து,இது தொடர்பாக,தமிழக அனைத்துக் கட்சிக் குழு டெல்லி சென்றுள்ள நிலையில்,இன்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத்தை சந்தித்து பேசினர்.

 இந்நிலையில்,மத்திய அமைச்சருடனான சந்திப்பிற்கு பிறகு பேசிய அனைத்துக் கட்சிக் குழுவினர், காவிரி மேலாண்மை ஆணைய ஒப்புதல் இல்லாமல் மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்காது.மேலும்,கர்நாடக அரசுக்கு அணையை கட்டுவதற்கான சாத்திய கூறுகள் இல்லை என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் உறுதியளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.