அடுத்த 18 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்பு...!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 18 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

மத்திய மேற்கு வங்க கடலில் மையம் கொண்டு உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் பட்சத்தில், புயலுக்கு பெயரிடும் முறைப்படி ஈரான் நாடு பரிந்துரைத்த ஹமூன் என பெயர் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

வரும் 25 ஆம் தேதி மாலை வங்கதேசத்தின் கேபுபாரா மற்றும் சிட்டகாங் இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.