ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபானுக்கு சீனா ஆதரவு...

தலிபான்களுடனான நட்பு உறவுக்கு தயாராக உள்ளோம் என சீனா அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபானுக்கு சீனா ஆதரவு...

அமெரிக்க படைகள் வெளியேற்றத்திற்கு பிறகு ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களாகவே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்தது. தலிபான்களை சமாளிக்க முடியாமல் அரசு படைகள் திணறி வந்தன. தலிபான்களோ முக்கிய நகரங்களை கைப்பற்றி முன்னேறிய நிலையில்,நேற்று தலைநகர் காபூலையும் கைப்பற்றியது. இந்நிலையில்  அதிபர் பதவியிலிருந்து விலகிய அஷ்ரப் கனி, ஆஃப்கானிஸ்தானை விட்டு தப்பிச் சென்றார். அவர் தஜிகிஸ்தானுக்கு சென்றுள்ளதாக கூறப்படும் நிலையில், காபூல் நகருக்குள் தாலிபான் படை நுழைந்தது.அத்துடன், ஆப்கன் தங்களது முழு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். சுமார், 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில், தலிபான்களுடனான நட்பு உறவுக்கு தயாராக உள்ளதாக சீனா அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சக செய்திதொடர்பாளர் ஹூவா சுனிங் செய்தியாளர்களிடம் கூறும்போது, ஆப்கானிஸ்தான் மக்களின் சொந்த விதியை சுதந்திரமாக தீர்மானிக்கும் உரிமையை சீனா மதிக்கிறது.மேலும், ஆப்கானிஸ்தானுடன் நட்பு மற்றும் கூட்டு உறவுகளை தொடர்ந்து வளர்க்க சீனா தயாராக உள்ளது. அதேபோல், தலிபான்களும் சீனாவுடன் நல்ல உறவை வளர்க்கும் தங்கள் நம்பிக்கையை பலமுறை வெளிப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் புனரமைப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.