அவசர சட்டத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு...எதிர்கட்சிகள் கூட்டத்தில் ஆம்ஆத்மி பங்கேற்பு!

அவசர சட்டத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு...எதிர்கட்சிகள் கூட்டத்தில் ஆம்ஆத்மி பங்கேற்பு!

டெல்லி அவசர சட்டத்தை எதிர்க்க காங்கிரஸ் ஆதரவளித்ததைத் தொடர்ந்து எதிர்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பதாக ஆம்ஆத்மி அறிவித்துள்ளது.

அதிகாரிகள் நியமனத்தில் தலையிடும் மத்திய அரசின் டெல்லி அவசர சட்டத்தை எதிர்க்கக் கோரி பாஜக அல்லாத கட்சித் தலைவர்களை சந்தித்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு திரட்டி வந்தார்.

இதையும் படிக்க : உச்சநீதிமன்றம் சென்ற ராகுல்காந்தி... மனுவில் சொன்ன 10 காரணங்கள் என்னென்ன?

இதுதொடர்பாக கருத்து தெரிவிக்காமல் காங்கிரஸ் இருந்து வந்த நிலையில், டெல்லி அவசர சட்டம் மட்டுமின்றி கூட்டாட்சிக்கு ஆபத்து விளைவிக்கும் பாஜகவின் அனைத்து செயல்பாடுகளையும் எதிர்ப்பதாக கட்சியின் பொதுசெயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்தார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, காங்கிரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், எதிர்கட்சிகளின் ஒற்றுமையை இம்முடிவு தெளிவுபடுத்துவதாகவும் ஆம்ஆத்மி தெரிவித்துள்ளது.