சர்ச்சை வீடியோவில் இருப்பது நானல்ல- அது சித்தரிக்கப்பட்டது..... சதானந்தா கவுடா விளக்கம் ....

கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் சதானந்தா கவுடா பற்றிய சர்ச்சை வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது சித்தரிக்கப்பட்டது என கவுடா விளக்கம் அளித்துள்ளார்.

சர்ச்சை வீடியோவில் இருப்பது நானல்ல-  அது சித்தரிக்கப்பட்டது..... சதானந்தா கவுடா விளக்கம் ....

பாஜக மூத்த தலைவரான சதானந்த கவுடா, பெண் ஒருவருடன் நெருக்கமாக ஆன்லைனில் உரையாடுவது போன்ற சர்ச்சை வீடியோ வெளியானது. இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த வீடியோவில் இருப்பது தானல்ல என்றும், அந்த வீடியோ மார்ஃபிங் செய்யப்பட்டது என்றும் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார். 

தனது நன்மதிப்பை சீர்குலைக்கும் நோக்கில் இந்த வீடியோ வெளியிடப்பட்டு வைரலாக்கப்பட்டுள்ளது எனவும் கவுடா டிவிட்டர் வாயிலாக விளக்கம் அளித்துள்ளார். மேலும் சதானந்த கவுடா, அந்த வீடியோ தொடர்பாக சைபர் கிரைம் போலீசாரிடம் புகாரும் அளித்துள்ளார்.