நட்சத்திர ஓட்டல்களோடு சேர்ந்து கொரோனா தடுப்பூசி முகாம்: மத்திய அரசு எச்சரிக்கை...

நட்சத்திர ஓட்டல்களோடு சேர்ந்து கொரோனா தடுப்பூசி முகாம்: மத்திய அரசு எச்சரிக்கை...

நட்சத்திர ஓட்டல்களோடு சேர்ந்து கொரோனா தடுப்பூசி முகாம் நடத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என, அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், சில தனியார் மருத்துவமனைகள் நட்சத்திர ஓட்டல்களோடு சேர்ந்து கொரோனா தடுப்பூசி முகாம் நடத்துவதாக, தங்களது கவனத்திற்கு வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அது வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிரானது என்றும், நட்சத்திர ஓட்டல்களில் நடத்தப்படும் தடுப்பூசி முகாமை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் கூறியுள்ள மத்திய அரசு, தடுப்பூசி வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் தனியார் மருத்துவமனைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை வலியுறுத்தியுள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள், முதியவர்களுக்கு வீட்டு அருகில், மாற்றுத்திறனாளிகளுக்கு குடியிருப்போர் நல சங்கம் மற்றும் சமுதாய கூடங்கள் ஆகிய 4 இடங்களில் மட்டுமே கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என விளக்கம் அளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி தடுப்பூசி இயக்கம் செயல்படுவதை கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும் என மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது.