மூன்று பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் 10 லட்ச மக்களுக்கு விதிக்கப்பட்ட ஊரடங்கு!

தடுப்பு நடவடிக்கையாக 3 பேர் பாதிக்கபட்ட சீனா நகரில் 10 லட்சம் பேருக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

மூன்று பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் 10 லட்ச மக்களுக்கு விதிக்கப்பட்ட ஊரடங்கு!

சீனாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஹெனான் மாகாணத்தில் உள்ள யுசவு நகரில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் அந்நகரில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் மக்கள் வெளியே செல்வதை தவிர்த்து வீடுகளிலேயே இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அங்கு பொதுப் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டு வணிக வளாகங்கள்,  மற்றும் சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டுள்ளது. பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், சீன அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கனவே, சீனாவின் சியான் நகரில் கடந்த 2 வாரங்களாக கடும் ஊரடங்கு அமலாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.