ட்விட்டர் நிறுவனம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த டெல்லி காவல்துறை...

இந்திய அரசின் சட்டப் பாதுகாப்பை இழந்துள்ள நிலையில், ட்விட்டர் நிறுவனம் மீது 4-வது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ட்விட்டர் நிறுவனம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த டெல்லி காவல்துறை...

மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை ஏற்க ட்விட்டர் மறுத்து வருகிறது. இதனால் மத்திய அரசுக்கும் டுவிட்டர் நிறுவனத்திற்கும் இடையேயான போர் நாளுக்கு நாள் முற்றி வருகிறது. இந்த நிலையில் இந்தியவில் சட்ட பாதுகாப்பை இழந்த டுவிட்டர் நிறுவனம் மீது அதில் பதிவேற்றப்படும் சட்டவிரோத பதிவுகள் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.

அதன் வரிசையில் தற்போது டுவிட்டர் மீது 4-வது வழக்கை டெல்லி போலீசார் பதிவு செய்துள்ளனர். சிறுவர்களின் ஆபாச படம் பதிவிடப்படுவதாக, போக்சோ மற்றும் ஐடி சட்டங்களின் கீழ் டுவிட்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அளித்த புகாரின் பேரில் டெல்லி காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு இந்த வழக்கை பதிவு செய்துள்ளது.