கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு புதிய கடன் உத்தரவாதத்தை அறிவித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்...

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் கடனுக்கு உத்தரவாதம் தரப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு புதிய கடன் உத்தரவாதத்தை அறிவித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்...

டெல்லியில் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் அனுராக் தாகூர் ஆகியோர், சுகாதாரத்துறை உட்கட்டமைப்புக்கு மட்டும்  50 ஆயிரம் கோடி கடன் உத்தரவாதம் தரப்படும் என்றும் தொழில்துறையினருக்கு அவசர கால கடனுதவியாக 1 லட்சத்து 5 ஆயிரம் கோடி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். 

மருத்துவமனைகளில் மருத்துவ உடகட்டமைப்பு வசதிகளுக்காக 100 கோடி வரை கடன் அளிக்கப்படும் என்றும் 7 புள்ளி 95 சதவீதம் வட்டியில் மூன்றாண்டுகளுக்கு இந்த கடன் வசதி அமலில் இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ள நிர்மலா சீதாராமன் பிற துறைகளுக்கான வட்டி வீதம் 8 புள்ளி 25 சதவிகிதமாக இருக்கும் என தெரிவித்தார். 

அரசு உத்தரவாதத்துடன் வங்கிகள் மூலம் தொழில்துறைக்கு கடன் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சர்வதேச விமான போக்குவரத்து சீரான பிறகு, இந்தியாவுக்கு வரும் முதல் 5 லட்சம் சுற்றுலா பயணிகளுக்கு விசா கட்டணம் கட்ட தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2022 மார்ச் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது