காசாவை நோக்கி படையெடுக்கும் இஸ்ரேலின் பதற்றமான காட்சிகள் வெளியானது...!

காசாவில் இஸ்ரேல் அதிதீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக ஐநாவும் உலக சுகாதார நிறுவனமும் கண்டனம் தெரிவித்துள்ளன. 

பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்திருந்த இஸ்ரேலுக்கும் இதனை எதிர்த்த ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே 7ம் நாளாக போர் நீடித்து வருகிறது. தொடர்ந்து இருதரப்பிலும் 4 ஆயிரத்து 200க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில், ஹமாஸ் தாக்குதல் நடத்தும் காசா மீது இஸ்ரேல் குண்டுமழை பொழிந்து வருகிறது. காசாவுக்கு உணவு, நீர், மின்சார விநியோகத்தை இஸ்ரேல் நிறுத்தியதைத் தொடர்ந்து, 24 மணி நேரத்துக்குள் தென்பகுதிக்குச் செல்லுமாறு உத்தரவிட்டது.

இதையும் படிக்க: மிசோரம், சத்தீஸ்கர் மாநில தேர்தல்: வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்!

இந்நிலையில் இஸ்ரேலின் செயல், பேரழிவு விளைவுகளை மக்கள் மீது திணிக்கும் நடவடிக்கை என ஐ. நா கண்டனம் தெரிவித்துள்ளது. மிகவும் இக்கட்டான சூழலில், இத்தனை மக்கள் இடம்பெயர்வது என்பது சாத்தியமற்ற நடவடிக்கை எனவும் கவலை தெரிவித்தது. நொறுங்கிப் போகும் நிலையில் காசா மருத்துவக் கட்டமைப்புகள் உள்ளதாகவும், மின்சாரம் நிறுத்தப்பட்டதால் மருத்துவமனைகளில் மக்கள் தவிப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.

இந்நிலையில் பெரும் பீரங்கிகள் கொண்ட போர் விமானங்களுடன் காசாவின் வடக்குப்பகுதியை நோக்கி இஸ்ரேல் ராணுவத்தினர் படையெடுக்கும் பதற்றமான காட்சிகள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை கொத்துக் கொத்தாக அதிகரிக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.