ஜவுளிக்கான ஜிஎஸ்டியை 12 சதவீதமாக உயர்த்தும் முடிவு ஒத்திவைக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு...

ஜவுளிக்கான ஜிஎஸ்டி வரியை 12 சதவீதமாக உயர்த்தும் முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்

ஜவுளிக்கான ஜிஎஸ்டியை 12 சதவீதமாக உயர்த்தும் முடிவு ஒத்திவைக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு...

46வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லி விக்ஞான் பவனில் நடைபெற்றது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 2022 -23 நிதியாண்டுக்கான பட்ஜெட் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், நடைபெற்ற இந்த கூட்டம் கவனம் பெற்றது.

இந்நிலையில் கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜவுளி பொருட்களுக்கான ஜிஎஸ்டியை 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தும் முடிவு நிறுத்தி வைக்கப்படுவதாகத் தெரிவித்தார். கடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜவுளி மற்றும் காலணிக்கான ஜிஎஸ்டியை உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், பல்வேறு மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று அது  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக விலையுள்ள காலணிக்கான ஜிஎஸ்டி 12 சதவீதமாக உயர்த்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.