ஒரு வருடத்திற்கு பிறகு ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் அனைத்துப் பள்ளிகளையும் திறக்க அரசு உத்தரவு...

பஞ்சாப் மாநிலத்தில் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் அனைத்துப் பள்ளிகளையும் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒரு வருடத்திற்கு பிறகு ஆகஸ்ட்  2ஆம் தேதி முதல் அனைத்துப் பள்ளிகளையும் திறக்க அரசு உத்தரவு...

பஞ்சாபில் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவது குறித்து வெளியான அரசு அறிவிப்பு கொரோனா பரவலைத் தடுக்க பஞ்சாபில் கடந்த 20-ம் தேதி அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.இதில் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளையும் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

 மேலும் பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

 மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகளை பள்ளிகள் பின்பற்றுவதை மாவட்ட நிர்வாகம் உறுதிசெய்ய வேண்டும் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.இந்நிலையில் சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், பள்ளிகளை தயார்படுத்தும் பணிகளில் பள்ளி நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளன.