இந்திய புகைப்பட கலைஞர் டேனிஷ் சித்திக் தாலிபான்களால் சுட்டுக்கொலை...

கொரோனாவின் கோரத்தை புகைப்படங்கள் மூலம் வெளிக்கொண்டு வந்த ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் புகைப்பட கலைஞர் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய புகைப்பட கலைஞர் டேனிஷ் சித்திக் தாலிபான்களால் சுட்டுக்கொலை...

புலிட்சர் விருது பெற்ற இந்திய புகைப்பட கலைஞர் டேனிஷ் சித்திக், ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்காக வேலை செய்து வந்தார். ரோஹிங்கியாக்களின் துயர வாழ்வை பதிவு செய்ததற்காக இவருக்கு புலிட்சர் விருது வழங்கப்பட்டது. மேலும் கொரோனா இரண்டவது அலையின்போது கங்கை நதிக்கரையில் பிணங்கள் எரிக்கப்படுவது குறித்து இவர் எடுத்த புகைப்படங்கள், கொரோனாவின் உண்மை நிலையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தஹர் பகுதியில், தாலிபான் தீவிரவாதிகளை பிடிப்பதற்காக, ஆப்கான் சிறப்புப் படைகளுடன் டேனிஷ் சித்திக் உடன் சென்றிருந்தார். அப்போது இருதரப்புக்கும் நடந்த தாக்குதலில் அவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் ஃபரித் மமுந்தே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.