இந்தியாவில் இதுவரை விமான விபத்தில் பலியான பிரமுகர்கள்....!!

இந்தியாவில் இதுவரை விமான விபத்தில் பலியான பிரமுகர்கள்....!!

நாட்டின் மிக உயரிய பொறுப்பில் உள்ள முப்படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் பணியாளர்கள் உட்பட 12 பேர் சென்ற இந்திய விமானப் படையின் Mi-17V5 ரக ஹெலிகாப்டர் புதன்கிழமை தமிழகத்தின் நீலகிரி மலைப் பகுதியில் உள்ள குன்னூர் அருகே காட்டேரி பார்க் என்ற இடத்தில் மலைமுகட்டில் சிக்கி தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. 13 உயிரிழந்த இந்த சம்பவம் இந்தியாவையே பதைபதைக்க வைத்துள்ளது.

ஜெனரல் பிபின் ராவத், 2015ல் நாகாலாந்தில் லெப்டினன்ட் ஜெனரலாக இருந்தபோது இதேபோல்   ஹெலிகாப்டர் தரையிலிருந்து சுமார் 20 அடி உயரத்தில் பறந்துபொது இன்ஜின் கோளாறு காரணமாக உடனேயே விபத்துக்குள்ளானது ஆனால் இந்த சம்பவத்தில் இருந்து ராவத் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார் என்று தெரியவந்துள்ளது இதே போன்று பல வான்வழி விபத்துகள் நிறைய இந்திய பிரமுகர்கள் உயிர்களை பலி வாங்கியுள்ளது சிலர் இதிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினாலும் பெரும்பாலோனருக்கு மரணம் தான் நிகழ்ந்துள்ளது அப்படி வான்வழி விபத்தில் இறந்த இந்திய பிரபலங்களின் பட்டியல் இதோ...

சஞ்சய் காந்தி :


காங்கிரஸ் தலைவரும், இந்திரா காந்தியின் மகனுமான சஞ்சய் காந்தி, 1980 ஆம் ஆண்டு ஜூன் மாதம் டெல்லியில் பிட்ஸ் எஸ்-2ஏ விமானத்தில் பறக்கும் போது விமான விபத்தில் கொல்லப்பட்டார். சஞ்சய் காந்தி கமர்ஷியல் பைலட் லைசென்ஸ் மற்றும் பயிற்றுவிப்பாளர் உரிமம் ஆகிய இரண்டையும் கொண்டிருந்தார், அவரின் சகோதரனான ராஜீவ் காந்தியும் இந்தியன் ஏர்லைன்ஸில் விமானியாக பணி புரிந்திருக்கிறார் என்பது குறிப்பிட தக்கது, பின்னாளில் அவரும் கொல்லப்பட்டார் ஆனால் விமான விபத்தில் அல்ல .

மாதவராவ் சிந்தியா:


விமான விபத்தில் உயிரிழந்த மற்றொரு மூத்த காங்கிரஸ் தலைவர், தற்போதைய மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தந்தை மாதவ் ராவ் சிந்தியா ஆவார். இவர் செப்டம்பர் 2001 இல் ஒரு பட்டய விமானத்தில் கான்பூருக்குச் சென்று கொண்டிருந்தபோது மத்திய உத்தரபிரதேசத்தின் மைன்புரி மாவட்டத்தில் உள்ள போகான் தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தின் அருகே விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார். 

ஜி.எம்.சி. பாலயோகி


தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், மக்களவை சபாநாயகருமான ஜி.எம்.சி. 3 மார்ச் 2002 அன்று ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தபோது ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்தில் சிக்கி தனது 50வது வயதில் மரணமடைந்தார். இந்தியாவில் சட்டம் படித்த வெகு சில அரசியல் வாதிகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிட தக்கது.

ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி


ஆந்திரப் பிரதேச முதல்வர் Y.S. ராஜசேகர ரெட்டி 2009 செப்டம்பரில் ஆந்திரப் பிரதேசத்தின் நல்லமலா மலைப்பகுதியில் இரட்டை எஞ்சின் கொண்ட பெல் 430 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இறந்தார். விபத்து பற்றிய விசாரணையில் அந்த ஹெலிகாப்டர் பறப்பதற்கு தகுதியானது அல்ல என்றும் மோசமான நிலையில் உள்ளதாக வகைப்படுத்த பட்டது என்றும் தெரியவந்தது. இவரின் மகனான ஜகன் மோகன் ரெட்டி தற்போது ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராகசெயல்பட்டு வருகிறார்.

டோர்ஜி காண்டு


அருணாச்சலப் பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு, 2011ஆம் ஆண்டு மே மாதம் இந்தியா-சீனா எல்லையில் உள்ள தவாங்கிலிருந்து 30 கிமீ தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார். தீவிர தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு ஐந்து நாட்களுக்குப் கழித்து டோர்ஜி காண்டுவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இதே அருணாச்சலப் பிரதேசத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, மே 2001 இல் தவாங் அருகே அருணாச்சல மந்திரி தேரா நதுங்கும் அவருடன் சேர்ந்து இன்னும் ஐந்து பேரும் கொல்லப்பட்டனர்.

ஓ.பி.ஜிண்டால் மற்றும் சுரேந்தர் சிங்


பிரபல தொழிலதிபரும் ஹரியானா மின்துறை அமைச்சருமான ஓ.பி. ஜிண்டால் 2005 ஆம் ஆண்டு டெல்லியில் இருந்து சண்டிகருக்குச் செல்லும் போது ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். ஜிண்டாலுடன், மாநில விவசாய அமைச்சரும் முன்னாள் முதல்வருமான பன்சி லாலின் மகன் சுரேந்தர் சிங்கும் இதே விபத்தில் உயிரிழந்தார். இவர்கள் இருப்பிற்கான காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது, தொழில் பகை மற்றும் அரசியல் நோக்கத்திற்காக இந்த கொலை நடந்தேறியிருக்கலாம் என்று சந்தகிக்க படுகின்றது.

சௌந்தர்யா 


அருணாச்சலம், படையப்பா, தவசி போன்ற பல வெற்றி படங்களில் நடித்து அனைவரின் மனதிலும் தனெக்கென்ன ஒரு தனியிடம் பிடித்தவர் நடிகை சௌந்தர்யா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, என அணைத்து மொழிகளிலும் கோலோச்சி வந்த இவர் 2004இல்  பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக தனது சகோதரர் அமர்நாத்துடன், பெங்களூரில் இருந்து கரீம்நகருக்குச் சென்றபோது விமான விபத்தில் சிக்கி தனது 32வது வயதில் உயிரிழந்தார்.
  
இப்படி இன்னும் சில தொழிலதிபர்கள் பிரபலங்கள் இதுபோன்ற விபத்தில் சிக்கி இறந்துள்ளார் ஆனால் பெரும்பாலான விபத்து வெறும் விபத்தல்ல கொலைமுயற்சி என்று கருதப்படுகிறது அப்படி பிபின் ராவதின் மரணமும் விபத்தா அல்லது கொலையா என்ற சந்தேகத்தில் உயர் மட்ட விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பணத்தை சேமிக்க நடந்து சென்று நேரத்தை விரயமாக்கும் மக்கள் அதிகப்படியாக இருக்கும் இதே நாட்டில் தான் பணத்தை செலவழித்து நேரத்தை மிச்சம் செய்யும் மக்களும் அதிகப்படியாக இருக்கிறார்கள்.