மராத்தா சமூகத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டில் சலுகைகளை பெற்றுக் கொள்ளலாம்: மகாராஷ்டிர அரசு

மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டில் சலுகைகளை பெற்றுக் கொள்ளலாம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

மராத்தா சமூகத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டில் சலுகைகளை பெற்றுக் கொள்ளலாம்: மகாராஷ்டிர அரசு

மராத்தா இனத்தவருக்கு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் 16 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் 2018ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா அரசால் எஸ்இபிசி சட்டம் இயற்றப்பட்டது. இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் மகாராஷ்டிராவில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு சதவீதம் 68 ஆக உயர்ந்தது. இந்தச் சட்டத்தை எதிர்த்து பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தன.

இதனை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மராத்தா சமூகத்தினருக்கு 16% இட ஒதுக்கீட்டை வழங்கு எஸ்இபிசி சட்டம் செல்லாது என்று தீர்ப்பளித்திருந்தது. இது மராத்தா சமூகத்தினரிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது இந்த நிலையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மராத்தா சமூகத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதாக மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.