ஆப்கனை உலுக்கிய தொடர் நிலநடுக்கங்கள்...2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த பரிதாபம்!

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 

ஆப்கான் நாட்டின் மேற்கே ஹெராத் மாகாணத்திற்கு வடமேற்கே கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.  6.3, 4.3 உள்ளிட்ட ரிக்டர் அளவுகளில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து 8 முறை கடுமையான நிலஅதிர்வுகள் உணரப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, நகரில் பல பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கியதால் சுவர்களில் விரிசல்கள் விழுந்து முழுக் கட்டிடங்களும் அடுத்தடுத்து உருக்குலைந்தன. 

இதையும் படிக்க : இஸ்ரேல் உருவான கதை...யூதர்கள் உருவாக்கிய நாடு...!

இதனால் பெண்கள்-குழந்தைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கனோர் இடிபாடுகளில் சிக்கினர். மீட்புப் பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், நிலநடுக்கத்தில் சிக்கி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு வரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.