பாகிஸ்தானில் நிகழ்ந்த கண்ணிவெடி தாக்குதலில் சீன பொறியாளர்கள் 9 பேர் உயிரிழப்பு...

பாகிஸ்தானில் கண்ணிவெடி வெடித்து, பேருந்து பலத்த சேதமடைந்ததில் சீன பொறியாளர்கள் 9 பேர் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 

பாகிஸ்தானில் நிகழ்ந்த கண்ணிவெடி தாக்குதலில் சீன பொறியாளர்கள் 9 பேர் உயிரிழப்பு...

பாகிஸ்தானின் பதுன்குவா மாகாணத்தில் உள்ள கைபரில் அம்மாநில அரசு புதிதாக  அணையை கட்டி வருகிறது. இந்த கட்டிடப்பணியில் சீன பொறியாளர்கள் பலர் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் வழக்கமான பணிகளுக்காக சீன பொறியாளர்கள், சர்வேயர்கள் மற்றும் பாதுகாப்புக்காக ராணுவ வீரர்கள் என 30 பேருடன்  வடக்கு காஷ்மீரிலிருந்து  அணை பகுதி நோக்கி பேருந்து ஒன்று சென்றுள்ளது.

அப்போது திடீரென பேருந்து, சாலையில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி மீது ஏறி இறங்கியது. இதில்  குண்டு வெடித்து பேருந்து பலத்த சேதமடைந்த நிலையில், அதில்  பயணித்த 9 சீன பொறியாளர்கள், பாகிஸ்தான் வீரர் என மொத்தம் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமுற்ற நிலையில், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதனிடையே இது கண்ணி வெடி விபத்தா அல்லது பேருந்து வெடிவைத்து தகர்த்தப்பட்டதா என்ற உறுதிப்பட தகவல் தெரியாததால், போலீசார் அதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.