லடாக் பகுதிகளில் முழுமையாக சீனா படைகள் திரும்ப பெற்றால் மட்டுமே அமைதி திரும்பும்: ராணுவ தலைமை தளபதி நரவானே

லடாக் பகுதிகளில் முழுமையாக சீனா படைகள் திரும்ப பெற்றால் மட்டுமே அமைதி திரும்பும்: ராணுவ தலைமை தளபதி நரவானே

லடாக் எல்லையின் அனைத்து பகுதிகளில் இருந்தும் படைகளை முழுமையாக திரும்ப பெற்றால் மட்டுமே, அமைதி நிலவும், என, ராணுவ தலைமை தளபதி நரவானே தெரிவித்துள்ளார்.

லடாக் எல்லை விவகாரத்தில் சீனாவுடன் இந்தியா உறுதியாக, தன் நிலையில் சிறிதும் விட்டுக் கொடுக்காமல் பேசி வருகிறது. இதுகுறித்து பேசிய தலைமை தளபதி நரவானே, லடாக் எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என்றால், எல்லையின் அனைத்து பகுதிகளில் இருந்தும் படைகளை திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இந்த நடவடிக்கையை மேற்கொள்ள இந்தியா தயாராக உள்ளதென குறிப்பிட்ட அவர், எனினும் இந்த விவகாரத்தில், சீனாதான் முதலில் செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். எல்லை பிரச்னை தொடர்பாக இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே ஏற்பட்ட பல ஒப்பந்தங்களை, சீன ராணுவம் தன்னிச்சையாக மீறுவது வழக்கமாக உள்ளதை சுட்டிக் காட்டிய நரவானே, இது உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.