ஈகைப் பெருநாள் : வாழ்த்து சொல்லிய பிரதமர் மோடி!

ஈகைப் பெருநாள் : வாழ்த்து சொல்லிய பிரதமர் மோடி!

ஈகைப் பெருநாள் தினத்தையொட்டி நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இறைதூதரான இப்ரஹீமின் தியாகத்தைப் போற்றும் வகையில் இன்று பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் இன்று தொழுகையில் ஈடுபட்டு கொண்டாடி வருகின்றனர். ராஜஸ்தானின் ஜெய்பூரில் நூற்றுக்கணக்கானோர் கூடி தொழுகை செய்து பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஜம்முகாஷ்மீரிலும் பிரமாண்ட தொழுகை நடைபெற்ற நிலையில் மத்தியப்பிரதேசத்தின் போபாலில் ஆயிரக்கணக்கானோர் கூடி ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

இதையும் படிக்க : யார் இந்த சிவதாஸ் மீனா? அடுத்த புதிய தலைமை செயலாளா்?

ஆக்ராவின் தாஜ்மஹாலில் ஒன்றுகூடிய மக்கள் பிரமாண்டத் தொழுகையில் ஈடுபட்டனர். அதேபோல் மும்பை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களின் மசூதிகளில் சிறுவர்கள் உட்பட ஏராளமானோர் சிறப்புத்தொழுகையில் ஈடுபட்டனர்.

முன்னதாக ட்விட்டர் பக்கத்தில் பக்ரீத் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, சமூகத்தில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வை நிலைநிறுத்தும் நாளை அனைவரும் மகிழ்ச்சியாகக் கொண்டாடுவோம் என தெரிவித்தார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.