காட்டு யானை பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காணுங்கள்...போராட்டத்தில் பொதுமக்கள்!

காட்டு யானை பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காணுங்கள்...போராட்டத்தில் பொதுமக்கள்!

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் நீடிக்கும் காட்டு யானைப் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இலங்கை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உட்பட்ட செங்கலடி - பதுளை வீதியில் ஒன்றுகூடிய பொதுமக்கள், செங்கலடி பகுதி வழியாக பேரணியாக சென்று மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, யானைகளால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க : ”பாஜக எம்பி பிரிஜ் பூஷன் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்யலாம்” டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல்!

அத்துடன், நீண்டகாலமாக தாங்கள் யானைகளின் அச்சுறுத்தல்களுடன் வாழ்ந்துவருவதாகவும், தமது வாழ்வாதாரம் அழிக்கப்படுவதாகவும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். இப்பகுதியில் உள்ள அதிகளவிலான மக்கள் மீன்பிடி மற்றும் விவசாயம், கால்நடைகளை அடிப்படையாக கொண்டுவாழும் நிலையில், இந்த தொழில்களை செய்யமுடியாத நிலைமை காணப்படுவதாகவும் போராட்டத்தில்  கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.