கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க சென்ற ராகுல்காந்தி - இருசக்கர வாகனத்தில் பயணித்து அசத்தல்

அரசியல் பயணமாக கோவா சென்றுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மக்களை சந்திப்பதற்காக இருசக்கர வாகன டாக்சியில் பயணித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க சென்ற ராகுல்காந்தி  -  இருசக்கர வாகனத்தில் பயணித்து அசத்தல்

கோவாவில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பணிகளில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கோவா சென்றுள்ள ராகுல் காந்தி, கட்சி பிரதிநிதிகளின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பம்போலிம் எனும் பகுதியில் இருந்து ஆசாத் மைதானத்திற்கு இருசக்கர வாகன டாக்சியில் சென்றுள்ளார்.

இதையடுத்து அங்குள்ள மக்களை நேரடியாக சந்தித்து பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் வெறும் வாக்குறுதிகள் மட்டுமல்ல, அது உத்தரவாதம் என்றார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.