சமையல் எண்ணெய்க்கான இறக்குமதி வரி குறைப்பு...

சமையல் எண்ணெய்க்கான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. இதனால் பாமாயில், சூரியகாந்தி எண்ணெய்யின் விலை குறைய உள்ளது.

சமையல் எண்ணெய்க்கான இறக்குமதி வரி குறைப்பு...

சர்வதேச அளவில் சமையல் எண்ணெயை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. நாட்டின் மொத்த தேவையில் 3-ல் 2 பங்கு இறக்குமதி செய்யப்படுகிறது. சமீபகாலமாக சமையல் எண்ணெய் உற்பத்தி குறைந்து, தட்டுப்பாடு அதிகரித்ததால் எண்ணெய் விலையும் கடுமையாக உயர்ந்தது.

இந்நிலையில், விலையைக் கட்டுப்படுத்தும் வகையில், சமையல் எண்ணெய் மீதான அடிப்படை இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. அதன்படி, சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு விதிக்கப்படும் 2 புள்ளி 5 சதவீத சுங்கவரியை முற்றிலுமாக நீக்கியுள்ளது.

இதனால், பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன் எண்ணெய் இறக்குமதி மீதான 2 புள்ளி 5 சதவீத சுங்கவரி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் சமையல் எண்ணெய் விலை குறையும். பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்ததன் மூலம், 
அவைகளின் விலை சற்று குறைந்துள்ளது. இதேபோன்று சமையல் எண்ணெய்களின் விலையும் குறைய உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.