வெடித்து சிதறிய கொதிகலன் - 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு

பெங்களூருவில், தின்பண்டம் தயாரிக்கும் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து சிதறியதில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

வெடித்து சிதறிய கொதிகலன் - 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு

பெங்களூரு மாகடி ரோடு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கோபாலபுரம் 5-வது கிராசில், ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த அரசு பள்ளியின் கட்டிடத்தில் கடந்த 8 மாதங்களாக எம்.எம்.புட் என்ற பெயரில் தின்பண்டம் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையின் உரிமையாளராக விஜய் மேத்தா என்பவரும், பங்குதாரராக சச்சின் (வயது 35) என்பவரும் இருந்து வருகின்றனர்.

இந்த தொழிற்சாலையில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். தொழிற்சாலையில் தின்பண்டம் தயாரிக்கும் பணியில்  பீகார் மாநிலத்தை சேர்ந்த மனீஷ் (25), சவுரவ் (25), தனலட்சுமி (52), சாந்தி (40) ஆகியோர் ஈடுபட்டு இருந்தனர். சச்சின் தொழிற்சாலையில் அமர்ந்து இருந்தார். இந்த நிலையில் தின்பண்டம் தயாரிக்க பயன்படுத்தும் கொதிகலன் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதில் மனீஷ், சவுரவ், தனலட்சுமி, சாந்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சத்தம் கேட்டு ஒடி வந்த அக்கம்பக்கத்தினர். படுகாயமடைந்த சச்சினை மீட்டு பெங்களுரு விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் எரிந்து கொண்டிருந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதற்கிடையில் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்,.