மாணவிகள் முன்பு பைக் சாகசத்தில் ஈடுபட்டு கீழே விழுந்த இளைஞர்கள்...வைரலாகும் வீடியோ.!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மாணவிகள் முன்பு இரு சக்கர வாகனத்தில் சாகத்தில் ஈடுபட்ட வாலிபர்கள் கீழே விழுந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

மாணவிகள் முன்பு பைக் சாகசத்தில் ஈடுபட்டு கீழே விழுந்த இளைஞர்கள்...வைரலாகும் வீடியோ.!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா கல்லூரி சாலையில் நேற்று இரு இளைஞர்கள் தங்களது (டியூக்) சொகுசு இருசக்கர வாகனத்தில் பள்ளி கல்லூரி மாணவிகள் பேருந்துக்காக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கும் பொழுது சாகசத்தில் ஈடுபட்டனர். 

அதன்பின்பு கோட்டையூர் பகுதிக்குச் சென்று அங்கு பேருந்துக்காக காத்திருக்கும் மாணவிகள் முன்பு சாகசம் செய்தனர். அப்போது பைக் நிலை தடுமாறியதில் இருவரும் கீழே விழுந்தனர்.  அதிர்ஷ்டவசமாக இருவருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. சாகசத்தில் ஈடுபடும்போது டூவீலர் நிலை தடுமாறியதால் அதில் பயணம் செய்த இருவரும் கீழே விழுந்தனர்.

 
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.  இந்த இளைஞர்கள் குறித்து காரைக்குடி அழகப்பாபுரம் காவல்துறையினரும் பள்ளத்தூர் காவல்துறையினரும் வண்டி பதிவு எண்ணை வைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இதுபோல் சாகசங்களில் ஈடுபடும் இளைஞர்களை கைது செய்து காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பைக் சாகசங்கள் குறையும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.