நீர்மூழ்கி கப்பலை அழிக்கும் திறனுள்ள போர் விமானம் இந்தியா வருகை

நீா்மூழ்கிக் கப்பலைத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட போர் விமானம் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தடைந்தது.

நீர்மூழ்கி கப்பலை அழிக்கும் திறனுள்ள போர் விமானம் இந்தியா வருகை

அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து எட்டு பி-8ஐ போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு கடந்த 2009-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது.

முதல் பி-8ஐ போர் விமானம் கடந்த 2013-ஆம் ஆண்டில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. இந்திய கடற்பகுதியை கண்காணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பி-8ஐ விமானங்கள் நீா்மூழ்கிக் கப்பலைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டவையாகும்.

இதையடுத்து கூடுதலாக 4 போர் விமானங்களை வாங்க கடந்த 2016-ஆம் ஆண்டில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி ஏற்கெனவே இரண்டு விமானங்கள் இந்தியா வந்தடைந்த நிலையில் தற்போது 11-வது பி-8ஐ போர் விமானம் கோவா வந்தடைந்துள்ளது. சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் இந்த சூழலில் இந்தியக் கடற்படையை பலப்படுத்துவதற்கு இந்த விமானம் பயன்படும் எனக் கூறப்படுகிறது.