காபூலுக்குள் நுழைந்தது தலிபான் படை: ஆப்கானிஸ்தான் அதிபர் மற்றும் அமைச்சர்களின் கதி என்ன?

ஆப்கானிஸ்தானில் அரசுப் படையினரை முறியடித்து, தலிபான்கள் தலைநகர் காபூலுக்குள் நுழைந்துள்ளதால்  மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

காபூலுக்குள் நுழைந்தது தலிபான் படை: ஆப்கானிஸ்தான் அதிபர் மற்றும் அமைச்சர்களின் கதி என்ன?

கடந்த 20 ஆண்டுகளான ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது படைகளை வாபஸ் பெறுவதாக அமெரிக்கா அறிவித்தது. கடந்த இரண்டு மாதங்களில் அமெரிக்கப் படைகள் முற்றிலும் வெளியேறிவிட்ட நிலையில் அங்கு தலிபான்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். முக்கிய நகரங்களை கைப்பற்றிய தலிபான்கள், ஆப்கான் ராணுவத்தையும் விரட்டியடித்து வருகின்றனர்.

அண்மையில் இந்தியர்கள் அதிகமாக வசித்து வரும் மசார் இ ஷரீப் நகரையும் அவர்கள் கைப்பற்றினர். இன்று ஜாலாலாபாத்தை கைப்பற்றிய அவர், அங்குள்ள முக்கிய சாலை வழியாக தலைநகர் காபூலுக்குள் நுழைந்துள்ளனர். இதனால் அரசுப் படைகளுடன் தலிபான்கள் இடையேயான மோதல் உக்கிரமடைந்துள்ளது. அங்கு குண்டு முழக்கங்கள் கேட்டு வருவதால் பெரும் அச்சம் நிலவுகிறது. 

இதனிடையே தூதரகங்கள் நிறைந்த பகுதியான காபூலில் இருந்து அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் அவசர அவசரமாக மக்களை  வெளியேற்றி வருகின்றன. எனினும் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட மாட்டாது என தலிபான்கள் உறுதி தெரிவித்துள்ளனர்.