நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்...உயிரிழப்பு எண்ணிக்கை 129-ஆக உயர்வு!

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 129-ஆக உயர்ந்துள்ளது.

நேபாளத்தில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 6 புள்ளி 4 ஆக பதிவான நடுக்கம் காரணமாக வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் அச்சம் அடைந்த பொது மக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். எனினும், ருகும் மேற்கு பகுதியில் பழமையான கட்டிடங்கள் சரிந்து விழுந்ததில் 36 பேர் உயிரிழந்தனர். இதேபோல், பல்வேறு பகுதிகளிலும் இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

இதையும் படிக்க : அமைச்சர் எ.வ. வேலுவுக்கு சொந்தமான இடங்களில் 2-வது நாளாக ஐ.டி. ரெய்டு...!

இந்நிலையில், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 129-ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 150-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேபாள பிரதமர் புஷ்பகமல் தஹால் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.