8 நாளாக நடைபெற்ற தூய்மை பணியாளர்கள் போராட்டம் வாபஸ்!

8 நாளாக நடைபெற்ற தூய்மை பணியாளர்கள் போராட்டம் வாபஸ்!

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் எட்டாவது நாளாக நடைபெற்று வந்த தூய்மை பணியாளர்களின் வேலை நிறுத்தம் போராட்டம் வாபாஸ் பெறப்பட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சி தூய்மை பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு கொடுப்பதை எதிர்த்தும், டெண்டர் அறிவிப்புகளை ரத்து செய்யக்கோரியும் கடந்த எட்டு நாட்களாக தொழிலாளர்கள் மேற்கொண்டுவரும் வேலை நிறுத்தம் மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டங்களைத் தொடர்ந்து, மாநகராட்சி மேயர், துணை மேயர்  மாநகராட்சி ஆணையர், துணை ஆணையர் உள்ளிட்டோர் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தையில் நடத்தினர். 

தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளான, தூய்மை பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை திரும்ப பெறவேண்டும், இதற்காக நடைபெறவுள்ள டெண்டர் குறித்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும், 480 நாட்கள் பணியாற்றிய தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும், குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியமான நாள் ஒன்றுக்கு 725 ரூபாயை ஏப்ரல் முதல் வழங்க வேண்டும் மற்றும் வேலை நிறுத்த நாட்களுக்கு முழுமையான சம்பளம் வழங்க வேண்டும் என கோரிக்கைகள் வைத்திருந்தனர்.

தூய்மை பணியாளர்களின் இந்த கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து, எட்டு நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் இன்று வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க || தொடர்கதையாகும் புள்ளிங்கோக்களின், படிக்கட்டு சாகச பயணம்!